யாழ். அரியாலை மலர்மகள் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த அதிஸ்டலெட்சுமி கருணாகரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:27/07/2023
அழகிய உங்கள் முகம் பார்த்து
ஓராண்டு ஆனால் என்ன
உங்கள் பாச நினைவுகள்
எங்களின் உயிர் மூச்சாய்
எம் செஞ்சமதில் வாழ்ந்து
எங்கள் ஆருயிர்த் தாயே
எங்கள் இதயத்தில் வாழும் தெய்வமே..
உங்கள் வழி நடத்தல் இன்றி
உங்கள் குரல் கேட்காது
ஓவ்வொரு நொடிப் பொழுதும்
நாங்கள் ஏங்குகிறோம் அம்மா
உங்கள் அன்பும் பாசமும்
எங்களுக்கு வேண்டும் அம்மா
எங்கள் உள்ளம் ஏங்குகின்றது
வழிமேல் விழி வைத்து காத்திருக்கின்றோம்
வந்து விடுங்கள் மீண்டும் எங்களிடம்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் ஆண்டுத்திதி 27-07-2023 வியாழக்கிழமை அன்று அவரது வீட்டில் நடைபெற்று, 30-07-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரின் வீட்டில் விருந்துபசார நிகழ்வு நடைபெறும்.
தகவல்: குடும்பத்தினர்