யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Billund ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலணையூர் பொன்னண்ணா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 31-07-2023
குடும்பத்தின் குல விளக்கே
ஆண்டு ஐந்து போனாலும்
உம் நினைவுகள் எம்மை
விட்டு அகலவில்லை ஐயா!
கண்ணை இமை காப்பதுபோல் - எமை
காவல் காத்த எம் காவல் தெய்வமே
கலையாத உன் முகமும்
கள்ளமில்லா உம் சிரிப்பும்
காண்பது எப்போது எம் இதய தெய்வமே
நீங்கள் வகுத்துத் தந்த பாதையிலேயே
நாங்கள் வாழ்கின்றோம்
ஆகையால் எங்களுக்கு நீங்கள் இல்லை என்ற
குறையைத் தவிர எக்குறையும் இல்லை
ஐந்து வருடங்கள் கடந்தால் என்ன
எங்கள் ஆயுள் உள்ளவரை உங்களை
எங்களால் மறக்கமுடியாது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம்