யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் யாழ்ப்பாணம் குரூசோ வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நீக்கிலாப்பிள்ளை வென்சஸ்லஸ் தங்கராஜா அவர்கள் 15-07-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நீக்கிலாப்பிள்ளை, திரேசம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான தியோப்பிள்ளை றெபேக்கா தம்பதிகளின் மருமகனும்,
சரோஜா ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
மொறின் நிஷாந்தி(கனடா) அவர்களின் பாசமிகு தந்தையும்,
றொமேஷ் பாலாஜி(கனடா) அவர்களின் மாமனாரும்,
ரினிற்றி, டெவோன் ஆகியோரின் நேசமிகு தாத்தாவும்,
எலிசபேத் சவிரிமுத்து(கனடா), யாகப்பு, றெனி யோசப் குணசிங்கம்(டென்மார்க்), அருட்சகோதரி ஹேர்மன் ஜோசப்(தி.கு.), ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்ற பீற்றர், அருள்நாயகம், காலஞ்சென்ற யேசுதாசன், றோசரி, பற்றிமா, மதுரநாயகம் ஆகியோரின் மைத்துனரும்
நேசன், கில்டா, காலஞ்சென்ற ஜெயந்தி, தைசன், ஹெலன், வில்லி ஆகியோரின் மாமனாரும்,
ரவீந்திரன், ரஞ்சினி, ராணி, றாஜினி, ரோகினி, றஜனி, றமணி ஆகியோரின் சிறிய தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அன்னம்மா அந்தோணிப்பிள்ளை(ஆசிரியை), மார்கிரேட் அலோசியஸ்(ஆசிரியை), அருட்சகோதரி பற்றிமா(ஆசிரியை), சிங்கராயர் ஆகியோரின் அன்புப் பெறாமகனும், ஆவார்.
அன்னாரின் பூதவுடல் யாழ். கோவில் வீதி 89ம் இலக்க இல்லத்தில் வைக்கப்பட்டு, நல்லடக்கத் திருப்பலி 20-07-2023 வியாழக்கிழமை அன்று பி.ப 03.30 மணியளவில் யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித மரியன்னை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.