யாழ். வெற்றிலைக்கேணியைப் பிறப்பிடமாகவும், ஆழியவளை கொடுக்குழாய் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பியையா பாலசிங்கம் அவர்கள் 03-07-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பியையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
இராசேந்திரம் ஈஸ்வரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜேந்தினி(உப தபாலதிபர்) அவர்களின் அன்புக் கணவரும்,
பாகீசன்(மொறட்டுவ பல்கலைக்கழகம்), பாலோஜன், பாருசாதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-07-2023 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் உபதபாலகம், கொடுக்குழாய் வீதி, ஆழியவளை எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் உடுத்துறை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.