யாழ். வண்ணார்பண்ணை வட மேற்கு நீராவியடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villepinte ஐ வதிவிடமாகவும் கொண்ட மதியாபரணம் புஸ்பராணி அவர்கள் 18-06-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம், செல்லம்மா தம்பதிகளின் மூன்றாவது மகளும், காலஞ்சென்ற ஐயாத்துரை, சரஸ்வதி தம்பதிகளின் மருமகளும்,
மதியாபரணம் அவர்களின் அன்பு மனைவியும்,
சுகுணா(பிரான்ஸ்), வதனா(ஜேர்மனி), சத்தியவண்ணன்(இலங்கை), காலஞ்சென்ற(சிறி வண்ணன் - இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கலைநாதன்(பிரான்ஸ்), ஜெகநாதன்(ஜேர்மனி), சுமதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிசாந், மேனகன், பிரணவன், சுலக்ஷன், ராம்கி, நிக்ஷன், லகிந், லக்சிகா, லக்ஷன், சுதா, சாதனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சவீன், மீராலினி ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான நேசமலர், ஞானாம்பிகை மற்றும் கதிர்காமநாதன், புனிதவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.