மரண அறிவித்தல்

திருமதி சீவரத்தினம் சரோஜினிதேவி
Born 19/11/1937 - Death 23/06/2023 யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் (Birth Place) யாழ்ப்பாணம், வவுனியா (Lived Place)யாழ். புங்குடுதீவு கிழக்கு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும், வவுனியாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சீவரத்தினம் சரோஜினிதேவி அவர்கள் 23-06-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விநாசித்தம்பி தங்கம்மா(புங்குடுதீவு கிழக்கு) தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சரவணமுத்து வைத்திலிங்கம்(நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய ஆதீனகர்த்தா பரம்பரை உடையார்), இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வைத்திலிங்கம் சீவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜீவகுமார், காலஞ்சென்ற ஜெயக்குமார் மற்றும் செல்வகுமார், சிவமலர், காலஞ்சென்ற விஜயகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுலோசனா, ஜமுனா, அம்பிகா, ஜெயந்தன், உமா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நவநீதபூபதி இராசரத்தினம்(அன்னம்மா, தர்மகர்த்தா புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்), சிவகாமசுந்தரி தேவசிகாமணி மற்றும் விநாசித்தம்பி கணேசமூர்த்தி(V.M. மாணிக்கம்), மகேஸ்வரி திலகநாதன், காலஞ்சென்ற சிவமணி யோகராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சஞ்ஜீப்குமார், கஜேந்திரன், பிரசன்யா, கஜீவன், கஜனி, சுவேக்கா, லக்ஷ்மிகா, ஐஸ்வரியன், சாருஜன், கிஷானி, கேசனா, கனியா, தனோஜன், ருபேந்தினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
விதுர்சன், ஹர்னிகா, அபிஷேக், அக்ஷிதா, யஷ்விகா ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான நீலாம்பிகை, துரைச்சுவாமி, ச.வை நடராஜா, ச.வை சிவப்பிரகாசம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-06-2023 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நடைபெற்று பின்னர் இராசேந்திரகுளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.