யாழ். எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு தேவிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரர் மயில்வாகனம் அவர்கள் 21-06-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரர், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற வல்லிபுரம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிலம்பு, வயிரமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
கனகரத்தினம், கிருஷ்ணலீலா, வனஜா(இலங்கை), சிறிரஞ்சன்(உதவும் இதயங்கள் பவுண்டேசன் இயக்குனர்- ஜேர்மனி), சிறிதாசன்(தொழிலதிபர்- இங்கிலாந்து), வகிந்தினி(கலா- இங்கிலாந்து), சிறிகாந்தன்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பஞ்சலிங்கம், மல்லிகா, வேல்முருகு(இலங்கை), நிலாஜினி(ஜேர்மனி), சஜிதா(இங்கிலாந்து), சிவகுமார்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டெனுசியா, கிருஷாந், கிசோபன், தர்சினி, தனுசன், வர்சிகா, தமிழ்பிரியன், ஆதித்தியன், துஷாலினி, யனுஸ், யதுஸ், அக்சா(பிரதீபன் டெனுசியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-06-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07.00 மணி முதல் மு.ப 10.30 மணிவரை புதுக்குடியிருப்பு தேவிபுரம் வீட்டில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து அவரது பிறந்த இடமான எழுதுமட்டுவாள் எடுத்து சென்று (எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில்) ந.ப 12.30 மணிமுதல் பி.ப 02.30 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 03.00 மணியளவில் எழுதுமட்டுவாள் இராமியன் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.