யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட கைலாயப்பிள்ளை தெய்வேந்திரராசா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
உன்னை இழந்து ஆண்டுகள் ஐந்து ஆனாலும்
உந்தன் அன்பு முகமும் நேசப் புன்னகையும்
மறையவில்லை அப்பா ...
அப்பா என்றழைக்க நாம் தேடி வரும் வேளையில்
நீங்கள் விண்மீனாய் தொலைதூரம் போனதேனோ?
ஆயிரம் உறவுகள் அரவணைக்க இருந்தாலும்
அப்பா உன் அன்புக்கு ஈடாகுமோ...
புன்னகை புரியும் உங்கள் முகம் தேடி
வேதனையில் ஏங்கித் தவிக்கிறோம்
தன்னந்தனியே தனித்திருந்த நீங்கள்
தவியாய் நாம் தவித்திடவே எமை மறந்து
மண்ணை விட்டு மாயமாகி
வையகத்தில் நாம் வாழும் காலம் வரை
நெஞ்சத்தில் உங்கள் நினைவு நிழலாடும்
உங்கள் ஆத்மா அமைதி பெற
கண்ணீர் பூக்களை காணிக்கையாக்குகின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்