யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவக்கொழுந்து சிவஞானம் {ஓய்வுநிலை ஆசிரியை - யா/ டிறிபேக் கல்லூரி, மற்றும் இந்துக் கல்லூரி, சாவகச்சேரி}அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 08-06-2023
அம்மா! நீங்கள் மண்ணில் மறைந்து
ஓராண்டு ஆயினும் எங்கள் நெஞ்சில்
நிலையாய் என்றும் நிறைந்துள்ளீர்கள்......
ஆயிரம் உறவுகள் அரவணைத்தாலும்
அம்மா உங்கள் அன்புக்கு ஈடாகுமா?
கனவுகளை நாங்கள் சுமந்து
கண்களில் நீர் சொரிந்து
கலங்குகிறோம் உங்கள் நினைவால்.....
இந்த நாள் எம்மால் மறக்கமுடியாத நாள்
நாங்கள் மறக்க விரும்பாத துயர நாள்
மனம் ஏங்கி தவிக்கின்றது
உங்களை காண உங்கள் குரல் கேட்க
காரணம் தெரியவில்லை மனதுக்கு நீங்கள்
இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களை
தேடிக்கொண்டே இருக்கும் என்றும்
உங்கள் நினைவுகளுடன் குடும்பத்தினர்
தகவல்: குடும்பத்தினர்