யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலசுதர்சினி கிரிதரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 16-06-2023
நீலவிழிகள் நீர்சொரிய
நிறைந்ததுவோ ஈராண்டுகள்
நீங்கிடாதே உம் நினைவு மண்ணிலே வீழ்ந்த மழை
மீண்டும் விண்ணுக்கே செல்லுமென்பார்
விண்ணுக்குச் சென்ற நீங்கள்
மீண்டும் மண்ணுக்கு வரமாட்டீரோ?
எம் கண்ணிலே வழியும் நீரை
உங்கள் கடைக் கண்ணால் பாருங்கள்!
உமை நினைத்தே உருகின்றோம்!
ஓராயிரம் ஆண்டுகளானாலும்
காற்றும், கடலும், வானும், கருமுகிலும்
இவ்வுலகில் போற்றி வாழ்கின்ற காலம்வரை...
எம் கடைசி மூச்சும் பேச்சும்
இவ் உலகில் வீற்றிருக்கும் இறுதி காலம்வரை...
உங்கள் நினைவுகளெல்லாம் எங்களோடு
என்றென்றும் நிறைந்திருக்கும்
வணங்குகின்றோம் உங்களை கரங்கள் கூப்பி...