யாழ். புங்கன்குளம் அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் கந்தையா(பரந்தன் இரசாயன தொழிற்சாலையின் முன்னைநாள் உத்தியோகத்தர், யாழ் பரியோவான் கல்லூரியின் புகழ்பூத்த விளையாட்டு வீரர்) அவர்கள் 29-05-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா கந்தையா கனகம்மா தம்பதிகளின் மகனும்,
சின்னத்துரை செல்லம்மா தம்பதிகளின் மருமகனும்,
கமலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான S.K மகாலிங்கம்(ஆசிரியர் பரி யோவான் கல்லூரி), S.K பரமலிங்கம்(சிறைச்சாலை உத்தியோகத்தர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புஸ்பராணி, கமலரஞ்சி ஆகியோரின் மைத்துனரும்,
அகிலன், செழியன், தேன்மொழி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நேதாஜி, சுபாசிறி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மிதிலன், மஞ்சரி, அட்சயா, அபினன், நித்திலன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
கமலநாயகி, வாமசிவன், வாமதேவன், வாமபாகன், தேவநாயகி ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரரும்,
காலஞ்சென்ற கைலாசபிள்ளை, திருஞானசுந்தரம், சதானந்தன், வீரலட்சுமி, சரஸ்வதி, அன்னலட்சுமி மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-06-2023 வியாழக்கிழமை அன்று 57 /1 புங்கன்குளம் வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் அரியாலை சித்து பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.