மரண அறிவித்தல்

திருமதி நாகம்மா நடராஜா
Born 01/09/1945 - Death 07/06/2020 புங்குடுதீவு 10ம் வட்டாரம் (Birth Place) கனடா (Lived Place)யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நாகம்மா நடராஜா அவர்கள் 07-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பருவதம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராஜா(பெரிய தம்பி Stores-இரத்தினபுரி) அவர்களின் அன்பு மனைவியும்,
விக்கினேஸ்வரன்(விக்கி), காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன்(ஜெகன் Mahawala Foreign Agency- கொழும்பு). ரேணுகா(கொழும்பு), நந்தினி, வனிதா, பிரதீபன், சுபாஷினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, இராசையா, நல்லதம்பி, பொன்னுத்துரை, செல்லம்மா, சோமசுந்தரம், கனகரெட்ணம், முத்துலிங்கம் மற்றும் இராசலிங்கம்(Maya Trading Colombo) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
நீரஜா, ரவிக்குமார், காலஞ்சென்ற கோபாலரெட்ணம், உதயகுமாரன், ஜெனிதா, ரஞ்சிதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பொன்னம்மா, மரகதம், ரத்தினம், இராசம்மா, காலஞ்சென்றவர்களான மனோன்மணி, இராஜரெட்ணம், மனோன்மணி, விமலாதேவி மற்றும் கமலா, பொன்னம்மா, செல்வராணி, மாயாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற துரைச்சாமி, ராஜேந்திரம் மற்றும் பாலசரஸ்வதி, கோபாலபிள்ளை ஆகியோரின் பாசமிகு சகலியும்,
சாருனி, அபிஷான், ஜெனி, பிரணவன், விஷ்வதீப், திரிஷா, ஆதித், யதுர், ஜெகன், ஜீவன், ரிஷா, லயா, வெண்பா ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி அஞ்சலி மற்றும் கிரியை தற்கால சூழ்நிலை காரணமாக அவரது குடும்பத்தினரோடு மட்டுமே நடைபெறும் என்பதை அறியத்தருகிறோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
11/06/2020 10:00:am - 11:00:am
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada