யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 3ம் வட்டாரம், முல்லைத்தீவு வன்னி தேவிபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பையா வேலுப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி : 02-06-2020
வாழும் போதும் எம் வழிகாட்டி நீ
வானுலகில் இருந்தும் வழிகாட்டு நீ எமக்கு
மீண்டும் நீ வரவேண்டும் எம் குடும்பத்தில்
என்றும் காத்திருப்போம் உன் வரவுக்காய்!
நினைவுகளில் வாழ்பவரே
நெஞ்சங்களில் வாழ்பவரே கனவு போல் இருக்கிறதே
கண்மடல்கள் வழிகிறதே
வெள்ளையுள்ளம் கொண்டவரே
வேதனையுள் துடிக்கவிட்டு சென்றனீரே...
ஓடிச் சென்றது ஓராண்டு
ஓடாது நிற்கும் ஓராயிரமாண்டு உன்நினைவுகள்....!
எங்கே சென்றாயோ எமக்கு முகவரி சொல்லவில்லை
வருவாயோ எம் தெய்வமே மீண்டும்......!!
காலன் ஏன் உங்களை காவுக் கொண்டான்
ஒரு ஆண்டு ஆனதுவே ஐயா
ஒரு ஆண்டல்ல நூறு ஆண்டுகள் சென்றாலும் மறவாது
என்றும் உங்கள் திருமுகமே...!!
உங்களின் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்