திருகோணமலை சல்லி 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த துரைச்சாமி தியாகராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் குடும்பத்து அகல்விளக்காய்,
அணையாத ஜோதியாய், அன்பான ஆசானாய்,
ஆதரித்த உங்களை நினைந்து
பணிந்து பாதம் தொழுகின்றோம் அப்பா....
அன்று எமக்கு காட்டிய அன்பும் ஆதரவும்
இன்று எம்மை காத்து வழிநடத்துகிறது
நீங்கள் இறுதிவரை எம்மோடு
இணைந்திருப்பீர் என்றிருந்தோம்
இடை நடுவில் தவிக்கவிட்டு
எங்கப்பா சென்றீர்கள்?
மறைந்திடுமோ உங்கள் திருமுகம்
எங்கள் மனங்களில் இருந்து
நீங்கள் எமைவிட்டுப் பிரிந்து
ஆண்டு ஒன்று சென்றிடினும்
எம் நெஞ்சினில்
உங்கள் நினைவுகள்
எம் உயிர் பிரியும்வரை
நீங்காது நிலைத்திருக்கும்.
தலைவனாய் நண்பனாய்
என் அன்னையை கரம்பிடித்தாய்
இல்லறம் நடத்தினாய்
கால்லாத்தின் காற்றும்
உன் பெயர் சொலுலும் தியாக தீபம் என்று!!
உழைப்பின் சிகரம் தொட்டு
உன் கஷ்டம் பாராது
எங்கள் கஷ்டம் சுமந்தாயே தந்தையே!!
அகதி என்ற அனாதையாக
லண்டன் வந்தோம் வாழ்ந்தோம்
ஊருக்கு சேவை செய்ய வேண்டும்
என்று உயர்த்திக் கூறும் போது
உன் மண் பற்று நான் அறிவேன்
நீங்கள் நோயுற்ற போது
மனம் உடைந்து போனேன்
நேத்திக் கடன் வைத்தேன் உன் நோய் தீர
எப்படி தீர்ப்பேன் உன் கடன்!
உங்கள் மரணம் கண்டு
சிலுவை சுமக்கின்றேன் தந்தையே!!
மனம் புளுவாய் துடிக்குதே!
என்றும் உங்கள் நினைவாகவே!
உங்கள் ஆத்ம சாந்திக்கு
பாதமலர் பணிந்து பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல் : சதீஸ் (மகன்)
VIDEO