யாழ். மிருசுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை சிவநேசன் அவர்கள் 26-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற செல்லையா, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சர்ணியா, சாருஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும், சிவப்பிரகாசம், புவனேஸ்வரி, யோகேஸ்வரி, ஆனந்தீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பசுபதிநாதன், முருகானந்தம், சாரதாதேவி, விஜியகுமாரி, ஜெயகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுபாஸ்கரன் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 26-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மிருசுவில் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.