மரண அறிவித்தல்

திரு பொன்னையா சோமசுந்தரம்
Born 18/01/1945 - Death 22/05/2020 பொலிகண்டி (Birth Place) பொலிகண்டி (Lived Place)யாழ். வடமராட்சி பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா சோமசுந்தரம் அவர்கள் 22-05-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா வள்ளியம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நேசமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
சக்திதாசன், தமயந்தி(முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் வலயக் கல்வி அலுவலகம்- வடமராட்சி), சிவதாசன்(அதிபர்- கிளி/நாகேஸ்வரா வித்தியாலயம்), கண்ணதாசன், பராதிதாசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இராசேந்திரம், தவராஜேஸ்வரியம்மா, பாலசுப்பிரமணியம், பத்மநாதன், காலஞ்சென்ற சிவஞானசுந்தரம் மற்றும் சிவகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நளாயினி, சிவானந்தஜோதி(பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் வலி கிழக்கு பிரதேச சபை புத்தூர்), ரோகினி(ஆசிரியை ய/வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி), கலைச்செல்வி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை பாக்கியநாதன் அவர்களின் அன்பு மைத்துனரும், சஞ்சிகா, சஜந்திகா, விஷ்ணுகா, தனுராம், கஜீபன், நிதுஷா, நிலக்ஷா, விஷ்ணுவருணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-05-2020 சனிக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊறணி இந்து மயானத்தில் பூதவுடல தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.