முல்லைத்தீவு விசுவமடுவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சொரூபன் சுருதியன் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீ பிறந்த நாள் முதலாய்
கண்கலங்க விட்டதில்லை- இன்று
காலனுடன் சென்று எங்களை
கலங்க வைத்தாயே!
உன் சிரிப்பை நாம் ரசித்த போதெல்லாம்
தெரியவில்லை எம் மொத்தச் சிரிப்பையும்
நீ எடுத்துச் செல்வாய் என்று!
என் செய்வேன் எம் செல்லமே
தேடுகின்றோம் எம் பிள்ளை போன திசை
எது என்று தெரியாது?
எங்கும் நீ நிறைந்தாய்
எதிலும் நீயே நிறைந்தாய்
எங்களில் கண் - நீர் நிறைத்து
நிஜத்தில் ஏன் மறைந்தாய்?
உதிர்ந்து நீ போனாலும்
உருக்கும் உன் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும் உறைந்திருக்கும்
சுருதிக்குட்டியே!
என்றும் உன் நினைவகளை நெஞ்சில் சுமக்கும்
குடும்பத்தினர்