யாழ்ப்பாணம் புங்குடுதீவு 6 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் மற்றும் கொழும்பு, இந்தியா சென்னை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி கமலாம்பிகை குலசேகரம்பிள்ளை அவர்கள் 14-10-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார், காலஞ்சென்ற திரு- சுப்பிரமணியம், திருமதி- பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற திரு- சதாசிவம், திருமதி- சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற குலசேகரம்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான நவரட்ணம், சீவரட்ணம், இந்துலட்சுமி, ஜெயலட்சுமி மற்றும் பிரேமகெளரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
வாணிதாசன், புஸ்பராதா, பிறேமதாசன், புவனதாசன், கண்ணதாசன், கணேசதாசன் ஆகியோரின் பாசமிகு தாயும்,
புஸ்பலதா, சீதா, கனகா, கமலினி காலஞ்சென்ற சிறிகாந்தன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தினேஷ், துஷ்யந்தன், பிருந்தா, விபூஷன், சமந்தா, மோலிசன், சந்தனா, கவுதம், பரிசா, நிக் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.