ஸ்விட்சர்லாந்து Mannedorf ஐ பிறப்பிடமாகவும், ஸ்விட்சர்லாந்து Meilen ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வன் சற்குணராஜா பவீந் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு ஆனாலும்
உள்ளம் எல்லாம்
தேம்புதையா
மனதினிலே நினைவுகளை
மறக்காமல்
தந்துவிட்டு
மாயமாய் மறைந்து
சென்றாயே!
ஆண்டுகள் ஒன்று ஓடி
மறைந்தது ஐயா
ஆனாலும்
எங்கள் கண்களில்
வழிந்தனீர்
காயவில்லையே!
எம்முயிரான எங்கள்
ஐயாவே!
நீங்கள் இறைவனடி
சேர்ந்து ஓராண்டு
கடந்து விட்டாலும்
நீங்கள் எப்பொழுதும்
எம்முன்
நிற்கின்றீர்கள்!
வாழ்க்கை என்பது
இறைவன் வகுத்த
வரைதானே!
அடுக்கடுக்காக
பன்னிரண்டு மாதங்களாகின
அருகில்
நீங்கள் இல்லாததால்
உங்கள் அன்புதனை
இழந்தோமே!!
எம் உள்ளத்தின்
உள்ளே
வளரும் ஒரு உன்னதமான
மனித தெய்வம்
நீங்கள் தானே- தம்
அன்பான புன்
சிரிப்பும்
பண்பான வார்த்தையும்
இனி எப்போது
கேட்போம் ஐயா!
இன்று பிரிவு எனும்
துக்கத்தினால்
ஓர் ஆண்டு
சென்றாலும்
உங்கள் உடல் மட்டும்
தான் அழிந்தது தந்தையே!
நீங்கள் எங்களை
பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு
அசைவிலும்
நீங்கள்
வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!!
உங்களது ஆத்மா
சாந்தியடைய இறைவனை
பிரார்த்திக்கின்றோம்!!