யாழ்ப்பாணம் வேலணை வடக்கு இலந்தவனம் பகுதியைப் பிறப்பிடமாகவும்,
யூகே london ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி நாகேஸ்வரி யோகநாதன் அவர்களின் 31 ஆம் நாள் நினைவஞ்சலியும்,
நன்றி நவிலலும்.
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும்
மண் விட்டு மறைந்து
நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும்
கண் விட்டு மறையாமல்
கன காலம் இருப்பீர்கள்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அம்மையாரின் மரணச்செய்தி கேட்டு வேதனையுற்று இருந்தபோது
நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், ஃபேஸ்புக், மின்னஞ்சல் மூலமாகவும் ஆறுதல் கூறியவர்களுக்கு
எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
தகவல்: அம்மையாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து
நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.