யாழ். நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், சுவிட்சர்லாந்து லுசர்ன் ஐ வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து கந்தசாமி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும்
மண் விட்டு மறைந்து
நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும்
கண் விட்டு மறையாமல்
பல காலம் இருப்பீர்கள்.
தகவல்: அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.