யாழ்ப்பாணம் புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா ப்ராம்ப்டனை
வதிவிடமாகவும் கொண்ட பால புஷ்பராணி குலசேகரம் அவர்கள் 07-09-2022 புதன்கிழமை அன்று
இறைவனிடம் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி நாகம்மா தம்பதிகளின்
அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இலட்சுமணப்பிள்ளை லட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
குலசேகரம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெனார்த்தன், லக்சியா பாசமிகு தாயும்,
கமலா, பேபி சரோசா, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், பாலசரவணபவன்,
சிவபாலன் ஆகியோரின் சகோதரியும்,
ஷப்ரினா, துஷியந்தன் அவர்களின் பாசமிகு மாமியாரும்,
மக்ஷன், லிவியா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.