யாழ். காரைநகர் பெரியமணலைப் பிறப்பிடமாகவும், மருதடியை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை இரத்தினசிங்கம் அவர்கள் 11-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்துவிட்டார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை தெய்வானை(வாசிந்தா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், பாலசிங்கம், பாலாமணி மற்றும் சொர்ணாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்மலோசினி(லண்டன்), சுரேஸ்குமார்(தாவடி), காலஞ்சென்ற சுபாஸ்குமார்(வளப்பன்), ஜீவாஜினி, ஹரிகரன்(கொலண்ட்) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-09-2022 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது வீட்டில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து சாம்பலோடை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.