யாழ். குடத்தனை பொற்பதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பங்கிராஸ் வரோணிக்கம்மா அவர்கள் 28-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோசேப்பு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் வல்லாத்தை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வல்லிபுரம் பங்கிராஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்தலூசியா, மேரிறெஜினா, மெற்றில்டா, லின்ரா ஜெயவதி, விஜய நிர்மலா, அருள்நேசன், மேனகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நல்லம்மா, ஞானம்மா, லூர்த்தம்மா மற்றும் கத்தரினாள், சுவாம்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி ஆராதணை 29-08-2022 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் பொற்பதி புனித இராயப்பர் ஆலயத்தில் நடைபெற்று பின்னர் புனித இராயப்பர் சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.