யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும், கொண்ட கருணாதேவி மகாதேவா அவர்கள் 15-08-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னதம்பி, சற்குணம் தம்பதிகளின் அருமைப் புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான சுப்பையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பையா மகாதேவா அவர்களின் பாசமிகு மனைவியும்,
தர்சினி(ராஜி- கனடா), காலஞ்சென்ற ரமேஷ், திருகுமரன்(கனடா), கஜேந்திரன்(கனடா), தர்மினி(கனடா), விஷ்ணுப்பிரியா(கனடா) ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,
மோகனராஜா, சுகன்தனா, மேனகா, முகுந்தன், கிருசாந்தன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற தவமணிதேவி, கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.