1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் அன்ரனி புஸ்பவதி
Born 15/11/1939 - Death 26/03/2019 யாழ். நெடுந்தீவு (Birth Place) நல்லூர், அரியாலை (Lived Place)யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், நல்லூர், அரியாலை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த அன்ரனி புஸ்பவதி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே!
இல்லம் என்னும் கோயிலின் தெய்வமாய்
அன்பு என்னும் பள்ளியின் ஆசிரியையாய்
நேர்மை என்னும் பாதையின் சாரதியாய்
சேவை என்னும் வார்த்தையின் இலக்கணமாய்
நட்பு என்னும் தோட்டத்தின் விருட்சமாய்
அறிவுரைகள் பல கூறி எம்மை நல்வழி நடத்தி
எங்கள் நெஞ்சத்தில் நிறைந்து விட்ட
அன்பு தெய்வமே அம்மா!
எண்ணம் முழுவதிலும் உன்
நினைப்பு விண்ணும் புவியும்
விளங்குமட்டும் உன் நினைவு
எம்மை பிரிந்து இவ் உலகு விட்டகல
எப்படித்தான் தாயே விருப்பம் கொண்டாய்?
அன்பின் திருவுருவாய்
அவனியில் வாழ்ந்த உம்மை
பண்பின் இலக்கணமாய்
பவனிவந்த எம் உறவை
ஆறாது ஆறாது உங்கள் பிரிவின் வலி
நல்ல மனைவியாய், அன்னையாய்
சகோதரியாய், சினேகிதியாய்
பிறப்பெடுத்த எங்கள் தெய்வமே?
எம்மை விட்டு எங்கு சென்றீர்?
உந்தனை நினைக்கையிலே உள்ளம் தடுமாறி
உருக்குலைந்து போகிறோம் என் செய்வோம்
எம்தனை தவிக்கவிட்டு எங்குதான் சென்றீரோ?
தேடுகிறோம் அம்மா தேம்பி அழுகிறோம்
கண்ணியமாய் வாழ்ந்த காருண்ணிய சீலியே
காசினியில் நின் புகழ் நிலைத்தே இருக்குமம்மா
பாசத்தால் அரவணைத்து அறிவு ஊட்டி வளர்தெடுத்த
எங்கள் வீட்டு தெய்வமே எங்குதான் சென்றீரோ?
விழுதெறிந்து பெருவிருட்சமாய் வியாபித்து
நிற்கும் வேளையிலே விண்ணுலகை அடைந்தீர்கள்
அதை எண்ணி பேதையராய் துடிக்கின்றோம்
துடுப்பற்ற படகு ஆனோம் துயர்துடைக்க வந்திடுங்கள்
கல்லுருகும் உங்கள் கனிவான முகம் கண்டால்
நெஞ்சத்து சோர்வெல்லாம் தானே உருகிவிடும்
எங்கள் அம்மாவே ஆண்டொன்று ஆனாலும்
ஆறவில்லை எங்கள் உள்ளம்
தவிக்கின்ற எம்மை விட்டு தனிப்பிறவி எடுத்து
எங்குதான் சென்றீர்கள்?
பெற்றோர் பெருமைப்படும் புதல்வியாய், அன்புமிக்க மனைவியாய்,
பாசமுள்ள அம்மாவாய், கடமையுணர்வுள்ள ஆசிரியையாய்,
மாணவர்கட்கு வழிகாட்டியாய், நல்லதொரு வழிகாட்டியாய்
நல்லதொரு மாமியாய், பாசமிகு பேத்தியாய் வாழ்ந்து
வரலாற்றில் இடம் பிடித்தீர் அம்மா !!
அறநெறி கொண்டு பலவழி கண்டு
அடுத்தவர் அறிவின் உயர்வுக்கும்
அவர்கள் உயர்கல்விக்கும்
பெரும்பணி ஆற்றிய பெருமகளே!
கல்விச் செல்வத்தை அள்ளி அணைத்து
ஆசிரியை ஆகினாய் துள்ளித் திரிந்த
பிள்ளைகளுக்கு கல்வி அறிவை ஊட்டி
களிப்பினில் மூழ்கச் செய்து ஊர்
வாழ வாழ்ந்த உத்தமியே
எங்குதான் சென்றீர்கள்?
இன்று நீ இல்லை நீர் படிப்பித்த
பிள்ளைகள் ஏங்கித் தவியாய்
தவிக்கின்றார்கள் எள்ளளவும்
உன்னை காலனவன் விடாமல்
பாதியில் பறித்து விட்டான்
உங்களிடம் கல்வி கற்ற மாணவர்களுக்கு
ஒரு சேவை மனப்பான்மை மிகுந்த ஆசிரியராய்
நல்லதொரு வழிகாட்டியாய் அவர்தம்
முன்னேற்றத்துக்காய் பாடுபட்டீர்கள்
அவர்கள் இன்று வாழ்வில் வெற்றியில் திளைத்திருப்பதை
காணாமல் எங்குதான் சென்றீர்கள் அம்மா?
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
அன்பின் பிரிவால் வாழும்
கணவர், பிள்ளைகள், மருமக்கள்,
சகோதர சகோதரிகள்.
அன்பின் ஒளியாய் அனைவரையும் அரவணைத்து
இல்லறம் நல்லறமாக இனிய வாழ்வின் வசந்தங்களை எமதாக்கி
எமது இன்பத்திலும் துன்பத்திலும் இணைந்து எமது வெற்றிக்கு
வழி வகுத்த எம் குடும்பதலைவிக்கு எமது அஞ்சலிகள்
இறைவன் மலரடியில் - நீ
இளைப்பாறுவாய் என
இறைஞ்சுகின்றோம் அம்மா!
உன்னைப்பிரிந்து என்றும்
ஆறாத்துயருறும்....
No Education Details
No Workplace Details
Miss you acca... Rest in peace... you are not meant to be left us so earlier.. My love and kindness for ever my dearest sister!!!
Jeyarajah Ramanathan 5 years ago![]()
You are my role model. I love you so much. Rest in peace
Osan Thomas 5 years ago![]()
Rest in Peace Sinna Aunty..
Samantha Jerry 5 years ago![]()