யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, டென்மார்க் Holstebro ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த முருகேசு இராமலிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 23-05-2022
ஐந்தாண்டுகள் கடந்தாலும்
ஆறாத துயருடன்
நாங்கள் நினைக்க நினைக்க
நாடி நரம்பு விரைக்கிறதே
நடந்தது கனவாக மாறவேண்டுமென
இறைவனை கெஞ்சுகிறதே
நாளும் பொழுதும் உன் நினைவால்
சொந்தம் அழுது உருகுதய்யா
நல்ல மனிதன் நீ என்று விழிகள்
வணங்கி பெருகுதய்யா...
எரிந்த தீபம் அணைந்ததென்ன
அணைத்த கைகள் மறைந்ததென்னநீயின்றி தவிக்கும் உன் பிள்ளையின்
சோகமும் உனக்கு புரியவில்லையா...
உங்களை எங்களிடமிருந்து பிரித்துவிட்டாலும்
என்றோ ஒரு நாள் நாங்கள் உங்களிடம்
வருவோமென்று ஆறுதலுடன் வாழ்கின்றோம்!
உங்கள் பிரிவால் துயருறும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்