Roermond யாழ். கொக்குவில் மேற்கு சொர்ணவடலியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Roermond ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் கிருஷ்ணகுமார் அவர்கள் 23-04-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், கொக்குவில் மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற அம்பலவாணர் சிவசுப்பிரமணியம், ராஜேஸ்வரி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும்,
அச்சுவேலியைச் சேர்ந்த துரைசிங்கம் வைரவப்பிள்ளை ராஜலக்ஷிமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
துவாரகாதேவி(செல்வி) அவர்களின் அன்புக் கணவரும்,
வித்யா அவர்களின் பாசமிகு தந்தையும்,நந்தகுமார், ரஞ்சனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லோகேஸ்வரன், விக்கினேஸ்வரன் ஆகியோரின் அன்பு மருமகனும்,
யோகேஸ்வரி, சறோஜினிதேவி ஆகியோரின் பெறாமகனும்,ஜெயமஞ்சுளா(மஞ்சு), பிறேம்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சந்தியா, காவியா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
அஷ்வின் அவர்களின் அன்பு மாமாவும்,
துரைரட்ணம், காலஞ்சென்ற துரைராஜசிங்கம், துரைவீரசிங்கம், துதிகந்தராசன், துரைராணி, துர்க்காதேவி, துதிமதிராணி, துதிகாம்பிகை, பூலோகரம்பை ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.