யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிவகாமி அவர்கள் 21-04-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சின்னத்தம்பி(முன்னாள் வலி கிழக்கு தென்பகுதி ப. நோ. கூட்டுறவு சங்கத் தலைவர், அகில இலங்கை சுகாதாரத்துறை ஓடிட்டர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவரூபன், காலஞ்சென்ற சிவதர்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ருசேந்தினி அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, இராமநாதன், கணபதிப்பிள்ளை(முன்னாள் இ.பொ.ச பரிசோதகர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம்(பிரதி அதிபர்), சிதம்பரம், கண்ணியம்மா, சின்னத்துரை, இலட்சுமி மற்றும் முத்துப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-04-2022 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்வேலி சீயக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.