யாழ். அராலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ilford ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த விஜேந்திரன் விஜயரட்ணம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
மனவொளிகளில் உம் முகம்
இந் நினைவொளியில்
தோன்றுதே காலங்கள்
கடந்தும் - உம் நினைவுகள்
கண்ணுக்குள்ளே ஊடுறுகிறதே
இன்ப உணர்வுகளையும்
உம்மால் கண்டு கழித்த
நாட்கள் கடந்து உமை நினைத்து
கண்ணீர் மல்கும் நாட்கள் வந்ததே
எத்தனை ஆண்டுகள்
மாறினாலும் உம் நினைவு
எம்முள் அகலாது ஐயா!
ஆற்பெரும் துயர் தந்து நீர்
பிரிந்து ஐந்தாண்டு ஆகியும்
உம் ஒவ்வொரு அசைவும் எம்முடன்
இருக்குமென மனசாந்தி கொண்டு
உம் பாதத்திற்கு மலர்
சாந்தி செலுத்துகின்றோம்..