யாழ். கொடிகாமம் கண்டி வீதி மடத்தடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசம்மா முத்துத்தம்பி அவர்கள் 12-04-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முத்துத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சின்னப்பிள்ளை, சரஸ்வதிப்பிள்ளை, தவமணி, கதிரவேலு, கனகரத்தினம், இராசமணி, இராசையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குலக்கொழுந்து(அச்சுவேலி), காலஞ்சென்ற தவமணி(சுவிஸ்), நவரத்தினம்(சிறுப்பிட்டி), நவநாதன்(கொடிகாமம்), சிவசோதி(கொடிகாமம்), நவசுதன்(பிரான்ஸ்), சிவகௌரி(ஜேர்மனி), நவசீலன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கணேசமூர்த்தி(அச்சுவேலி), ஸ்ரீரங்கராஜா(சுவிஸ்), சத்தியதேவி(சிறுப்பிட்டி), சிவசோதி(கொடிகாமம்), யோகநாதன்(கொடிகாமம்), பூங்குழலி(பிரான்ஸ்), ரவீந்திரநாதன்(ஜேர்மனி), சுமதி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கபிலன்- கஸ்தூரி(பிரான்ஸ்), ருக்சன்- வேணுஷன்(சுவிஸ்), நிதர்சன்(பிரித்தானியா), காலஞ்சென்ற நிரூபன்(சிறுப்பிட்டி), நிரோஜன்(சிறுப்பிட்டி), விதுஷன்(கொடிகாமம்), அபிராமி- சஜீவன்(கொடிகாமம்), ராகவி, ஜனனி- சுபந்தன்(பிரான்ஸ்), ஆர்த்திகா, அபிலன், அபிநயா- அபிரா(ஜேர்மனி), துர்க்கா- கோபினா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பிறேமஸ்வரூபா, பிரஷாந்திவாஹினி, ஹரணி, ஜெய்தேஷ், நக்ஷத்ரா, நிவேதன், நிஷ்விகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் கொடிகாமம் கண்டி வீதி, மடத்தடியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொடிகாமம் வேவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.