வவுனியா நெடுங்கேணி ஒதியமலையைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா குலேந்திரன் அவர்கள் 19-02-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம் சிவனேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
தயாநிதி(தயா) அவர்களின் அன்புக் கணவரும்,
கஜீவன்(A/L 2022 கணிதப்பிரிவு மாணவன்- வசாவிளான் மத்திய கல்லூரி), மதுசன்(A/L 2023 வர்த்தகப் பிரிவு மாணவன்- வசாவிளான் மத்திய கல்லூரி), தேனுசா( தரம் 08 மாணவி- உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-02-2022 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10.00 மணியளவில் உரும்பிராய் இளங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.