மட்டக்களப்பு பெரியகல்லாற்றைப் பிறப்பிடமாகவும், மட்டுநகர் மற்றும் பாண்டிருப்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கண்மணி சரவணமுத்து அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 16-02-2022
ஆண்டு ஒன்று அகன்றோடி விட்டாலும்
அழியாத நினைவலைகள் எம் அடிமனதின்
ஆழத்தில் இருந்து வதைக்கிறதே
என் செய்வோம் நாங்கள்?
மனம் ஏங்கி தவிக்கின்றது
உங்களை காண உங்கள் குரல் கேட்க
காரணம் தெரியவில்லை
மனதுக்கு நீங்கள்
இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது
உங்கள் இன்முகமும்
புன்சிரிப்பும் எங்கள்
மனதை விட்டகலவில்லை
நிலையில்லா இவ்வுலகை
விட்டு நீள்துயில் கொண்ட
உங்களின் ஆத்மா சாந்தியடைய
என்றும் இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!